Maharaja Review: அடிச்சு தூள் கிளப்பிய விஜய் சேதுபதி... மகாராஜா டிவிட்டர் விமர்சனம் இதோ!

விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா நாளை வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

Jun 13, 2024 - 11:10
Maharaja Review: அடிச்சு தூள் கிளப்பிய விஜய் சேதுபதி... மகாராஜா டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ளது மகாராஜா. குரங்கு பொம்மை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நித்திலன் சாமிநாதன் மகாராஜாவை இயக்கியுள்ளார். இயக்குநர் நித்திலனுக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், நட்டி உள்ளிட்ட பலர் மகாராஜா படத்தில் நடித்துள்ளனர். காந்தாரா புகழ் அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மகராஜா நாளை (ஜூன் 14) ரிலீஸாகவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. பத்திரிகையாளர்களுக்கான மகாராஜா படத்தின் பிரஸ் ஷோ திரையிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது மகாராஜா.

பிரபல சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர் ராஜசேகர், மகாராஜா படத்துக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். மேலும், இந்தாண்டின் சிறந்த திரைப்படம் மகாராஜா என்றும், விஜய் சேதுபதிக்கும் இது தரமான கம்பேக் எனவும் குறிப்பிட்டுள்ளார். மகாராஜா படத்தின் திரைக்கதை அனைத்துவிதத்திலும் சிறப்பாக வந்துள்ளது, இயக்குநர் நித்திலன் சாமிநாதன் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து மிரட்டியுள்ளார். தனது முதல் படமான குரங்கு பொம்மை போல, மகாராஜாவிலும் எதிர்பார்க்க முடியாத கிளைமேக்ஸ் சீன் வைத்து ஷாக் கொடுத்துள்ளார். விஜய் சேதுபதிக்கு இந்தப் படத்தில் நார்மலான ஹீரோ ரோல் தான் என்றாலும், நடிப்பில் அதகளம் செய்துள்ளார். அதேபோல், அனுராக் காஷ்யப் தான் சிறந்த இயக்குநர் மட்டுமில்லை, நடிகரும் கூட என செம்மையாக ஸ்கோர் செய்துள்ளார். அதேபோல், படத்தின் இரண்டாம் பாதியில் நட்டியும் நடிப்பில் மாஸ் காட்டுகிறார். இவர்களுடன் சிங்கம் புலி, முனிஷ்காந்த், அருள்தாஸ், அபிராமி ஆகியோரும் நடிப்பில் கவனம் ஈர்க்கின்றனர். படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கின்றன. முக்கியமாக திரைக்கதையில் மகாராஜா தனித்து நிற்கிறது. ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் மகாராஜா என விமர்சனம் செய்துள்ளார். 

வாசு சினிமாஸ் டிவிட்டர் தளத்திலும் மகாராஜா படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ளது. ஒரு ஹீரோவுக்கு 50வது படம் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்தப் படம் மூலம் விஜய் சேதுபதி பெஸ்ட் ஹீரோ என நிரூபித்துள்ளார். இதுவரை விஜய் சேதுபதி நடித்ததில் சிறந்த மூவி மகாராஜா தான் என குறிப்பிட்டுள்ளது. அதேபோல், நித்திலன் சாமிநாதனின் திரைக்கதை தரம், கோலிவுட்டில் இந்தப் படம் மைல் ஸ்டோனாக இருக்கும். 2024ம் ஆண்டின் சூப்பர் ஹிட் மூவி மகாராஜா தான், இந்தப் படத்தின் வெற்றியில் எடிட்டர் பிலோமின் ராஜ் பங்களிப்பு அதிகம் என விமர்சனம் கொடுத்துள்ளது.

அதேபோல், சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர் ரமேஷ் பாலா, மகாராஜா படத்துக்கு 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். மேலும் மகாராஜா போன்ற படங்கள் ரொம்பவே அரிதாக தான் பார்க்க முடியும், திரைக்கதை, மேக்கிங், சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் என அனைத்திலும் மாஸ் காட்டுகிறது. விஜய் சேதுபதிக்கு இதைவிடவும் சிறந்த 50வது படம் அமைய வாய்ப்பே இல்லை. நடிப்பில் கிளாஸ் & மாஸ்ஸாக மிரட்டியுள்ளார். அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, அபிராமி ஆகியோரது நடிப்பும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. அதேபோல் டெக்னிக்கலாகவும் மகாராஜா படத்தை வேற லெவலில் உருவாக்கியுள்ளது படக்குழு என பாராட்டியுள்ளார்.

சித்தார்த் ஸ்ரீனிவாஸ் என்ற சினிமா ட்ராக்கரும் மகாராஜா படத்துக்கு 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். நித்திலன் சாமிநாதன் இயக்கிய குரங்கு பொம்மை 100 சதவீதம் என்றால், மகாராஜா 300% எனலாம். மகாராஜா திரைக்கதையில் எதிர்பாராத தருணத்தில் செம்மையான சர்ப்ரைஸ் வைத்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார் நித்திலன். ஒட்டுமொத்தமாக மகாராஜா படத்தின் கிளைமேக்ஸ் கொடுத்த அதிர்வில் இருந்து இன்னும் மீளவில்லை என விமர்சனம் செய்துள்ளார். 

ஒட்டுமொத்தமாக மகாராஜா படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்தாண்டு இதுவரை வெளியானதில் விமர்சன ரீதியாக இப்படியொரு வரவேற்பைப் பெற்றது மகாராஜா திரைப்படம் மட்டுமே. விஜய் சேதுபதிக்கு 50வது படமாக நாளை வெளியாகவுள்ள மகாராஜா, பாக்ஸ் ஆபிஸிலும் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow