எந்த நாட்டில் தெரியுமா ? 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை: தவறினால் ரூ.24 கோடி அபாரதம் 

16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.24 கோடி அபாரதம் விதிக்கப்படும் என மலேசியா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 

எந்த நாட்டில் தெரியுமா ? 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை: தவறினால் ரூ.24 கோடி அபாரதம் 
16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை

சமூக வலைதளப் பயன்பட்டால் சிறுவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. ஆன் லைன் பயன்பாடு காரணமாக குழந்தைகளின் உடல் நலம் மட்டுமில்லாது மனநலனும் பாதிக்கப்படக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளும் ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. 

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், மலேசியா அரசும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அதன்படி, சமூக வலைதளங்களைப் பயன்படுத்த கட்டாயமாக வயது சரிபார்ப்பு முறைகளைச் செயல்படுத்த வேண்டும் மற்றும் 16 வயதிற்குட்பட்டோர் கணக்குத் தொடங்குவதைத் தடுக்க வேண்டும் ஆகிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதாவது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட தளங்களுக்கு இந்த விதி பொருந்தும். விதிகளைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்களுக்கு ரூ.24 கோடி வரையில் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.  'இத்தகைய முழுமையான தடை பதின்ம வயதினரை முறைப்படுத்தப்படாத இணையப் பக்கங்களுக்குத் தள்ளிவிடும்,' என மெட்டா நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow