நேற்று அதிரடி உயர்வு… இன்று சரிந்த தங்கம் விலை! நகைப்பிரியர்களுக்கு ஆறுதல்!
நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் நகைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தங்கத்தின் விலை நேற்று இரண்டு முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று மீண்டும் சரிந்து சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் சரிவைச் சந்தித்திருந்தது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நகைக்கடைகளிலும் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது.ஆனால், மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் விலை மாற்றங்கள் நகை வாங்கக் காத்திருக்கும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
தங்கத்தின் விலை உயர்வுக்கும் சரிவுக்கும் சர்வதேசப் பொருளாதாரச் சூழல் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் பணவீக்கம், மத்திய வங்கியின் வட்டி விகித முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.அமெரிக்காவில் அண்மையில் வெளியான பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை முதலில் சரிவைச் சந்தித்தது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சந்தையின் போக்கு மாறி, தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது.சர்வதேச சந்தையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தின் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரண்டு முறை தங்கத்தின் விலை அதிகரித்தது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,770-க்கும், ஒரு சவரன் ரூ.94,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தங்கத்தின் விலை தொடர்ந்து உயரக்கூடும் என்றே கருதப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விலை சரிந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதம் உள்ளிட்ட அம்சங்கள் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன.இந்தியாவைப் பொறுத்தமட்டில், குறிப்பாகத் தங்கம் ஒரு முக்கியப் பொருளாகவே இருந்து வருகிறது.நகைப்பிரியர்களுக்கு மட்டுமல்லாமல், சுபகாரியங்கள், சேமிப்பு, எளிதில் கடன் பெறுதல் உள்ளிட்டவற்றிலும் தங்கம் முக்கிய இடத்தை வகிக்கிறது.இந்த நிலையில், கடந்த ஆண்டுகளில் உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு திடீரெனச் சரிந்த தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சென்றது.மேலும் குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் கீழ் செல்லும் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது ஏற்றம், இறக்கம் என்ற நிலையில் தங்கத்தின் விலை உள்ளது. என்றாலும், ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே ஏற்ற இறக்கம் இருக்கும் நிலையில், இதே நிலைதான் வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று கருதப்படுகிறது.
What's Your Reaction?