தவெக சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்: விஜய் விரைவில் அறிவிக்கிறார் 

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல்  ஆணையம் பொதுசின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த சின்னத்தை தொண்டர்கள் மத்தியில் விஜய் விரைவில் அறிவிக்க உள்ளார். 

தவெக சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்: விஜய் விரைவில் அறிவிக்கிறார் 
Election Commission allocates Thaweka symbol

சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆட்டோ, விசில் என சில சின்னங்களை குறிப்பிட்டு, அதில் ஒன்றை ஒதுக்க தமிழக வெற்றிக் கழகம் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆட்டோ சின்னம் கிடைக்கும் என தவெக தரப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால், கேரளாவை சேர்ந்த கட்சிககு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டதால், தவெக ஆட்டோ சின்னம் கிடைக்கவில்லை. இதால், பேட், பூமி உருண்டை, விசில், மோதிரம் உள்ளிட்ட சின்னங்களில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தவெக தரப்பில் கோப்பட்டு இருந்தது. 

விரைவில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தன்னுடைய கட்சிக்கான சின்னத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் நான்கு எழுத்து கொண்ட சின்னம் தேர்தல் ஆணையம் தவெகவிற்கு ஒதுக்கி இருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி பெண்களை அந்த சின்னம் கவரும் வகையில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால், தவெக கோரி இருந்த சின்ன பட்டியலில் நான்கு எழுத்து கொண்ட சின்னம் மோதிரம், பெண்களை எளிதாக சென்றடையும். இந்த சின்னத்தை தொண்டர்கள் மத்தியில் விரைவில் விஜய் அறிமுகப்படுத்தி வைக்க உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow