12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல் - ரசிகர்கள் ஏமாற்றம்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து நியூஸி பவுலர் ஓ’ரூர்க் பந்தில் ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்
இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி விளையாட்டு அரங்கில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக நியூஸிலாந்து அணி 402 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்க களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 35 ரன்களுக்கும், ரோஹித் சர்மா 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில் விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் ஜோடி சேர்ந்தனர் பட்டையைக் கிளப்பினர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்தது. இன்றைய ஆட்டம் முடிகிற வேளையில் விராட் கோலி 70 ரன்களில் கிளன் பிலிப்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நான்காம் நாள் ஆட்டத்தில் சர்ஃபராஸ் கான் 70 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில் ரிஷப் பந்த் களமிறங்கினார். இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்திய நிலையில் சர்ஃப்ராஸ் கான் 150 ரன்கள் எடுத்து டிம் சௌதியின் பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கே.எல்.ராகுல் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ராகுல் இந்த இன்னிங்ஸில் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பந்த் உடன் ராகுல் களத்தில் இருந்த நிலையில் ரிஷப் பந்த் 99 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஒரு ரன்னில் சதத்தை விளாசக் காத்திருந்த போது ஓ’ரூர்க் பந்தில் போல்ட் ஆகி அவுட் ஆனார். அதன் பிறகு ரவீந்திர ஜடேஜா களமிறங்கிய நிலையில் ராகுலும் ஜடேஜாவும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த பார்ட்னர்ஷிப் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஓ’ரூர்க் பந்தில் ராகுல் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார். இந்த இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் அனைவரும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் கே.எல்.ராகுலின் ஆட்டம் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
What's Your Reaction?