ஒரு ரன்னில் சதத்தைத் தவற விட்ட ரிஷப் பந்த்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சர்ஃப்ராஸ் கான் 150 ரன்கள் எடுத்து அவுட் ஆகியுள்ளார். அதிரடிக்குப் பெயர் போன ரிஷப் பந்த் 99 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் சதத்தைத் தவற விட்டார்.
இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி விளையாட்டு அரங்கில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக நியூஸிலாந்து அணி 402 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்க களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 35 ரன்களுக்கும், ரோஹித் சர்மா 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில் விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் ஜோடி சேர்ந்தனர் பட்டையைக் கிளப்பினர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்தது. இன்றைய ஆட்டம் முடிகிற வேளையில் விராட் கோலி 70 ரன்களில் கிளன் பிலிப்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்தது. சர்ஃபராஸ் கான் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்நிலையில் நான்காம் நாளான இன்று சர்ஃப்ராஸ் கான் 150 ரன்கள் எடுத்து டிம் சௌதியின் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரராக பெயர் பெற்ற ரிஷப் பந்த் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 99 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஒரு ரன்னில் சதத்தை விளாசக் காத்திருந்த போது ஓ’ரூர்க் பந்தில் போல்ட் ஆகி அவுட் ஆனார். ஒரு ரன்னில் பந்த் சதத்தை தவற விட்டது இந்திய ரசிகர்களை வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது. மற்றபடி 9 ஃபோர்கள் மற்றும் 5 சிக்ஸர்கள் என தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
What's Your Reaction?