முதலமைச்சரான பின் முதல் முறையாக.. நாளை நடைபெறுகிறது தவெக கல்வி விருது விழா!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நாளை மதியம் 2 மணியளவில் முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

Nov 3, 2026 - 21:24
முதலமைச்சரான பின் முதல் முறையாக.. நாளை நடைபெறுகிறது தவெக கல்வி விருது விழா!
CM Vijay

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்துப் பாராட்டும் தவெக-வின் கல்வி விருது வழங்கும் விழா நாளை (நவ.3) நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் ஆண்டுதோறும் பொதுத்தேர்வில் சாதனை படைக்கும் மாணவச் செல்வங்களுக்கு விருது வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான முதற்கட்ட பாராட்டு விழா நாளை பிற்பகல் 2 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது என அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறும் விழாவில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதி வாரியான சாதனை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளதுடன், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், "எதிர்கால சமுதாயத்தின் கல்வி மற்றும் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி வரும் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கி கௌரவிக்க உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow