பிரதமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதில் தவறு ஏதுமில்லை-நயினார் நாகேந்திரன் பேட்டி

போக்குவரத்து, உட் கட்டமைப்பு வசதிகளை  பாரத பிரதமர் மேம்படுத்தி உள்ளார்.

Jan 13, 2024 - 23:43
பிரதமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதில் தவறு ஏதுமில்லை-நயினார் நாகேந்திரன் பேட்டி

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆகம விதிகள் மந்திரங்கள் மாறுபடும் என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி  பாளையங்கோட்டை வஉசி உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இறகு வந்து போட்டியை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது, தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது என்பது யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் அமைச்சர் பதவி கொடுக்கலாம். அது அவர்களின் உட்கட்சி விவகாரம்.ஆனால் பதவி கொடுத்த பிறகு தான் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை தெரியும். 

கடந்த 10 ஆண்டுகளாக 4 வழிச்சாலை, உள்ளிட்ட  போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகளை  பாரத பிரதமர் மேம்படுத்தி உள்ளார்.இதனால் பல தொழில்கள் மேம்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 130 விமான நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு விமான நிலையங்களை கொடுப்பது தவறில்லை.அரசாங்கம் தொழில் செய்யக்கூடாது.அரசாங்கம் தொழில் செய்தால் அதில் லாபம் கிடைக்காது.அவ்வாறு அரசாங்கம் எந்த தொழில் செய்தாலும் நஷ்டத்தில் தான்  முடியும்.தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை வைத்துக்கொண்டு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் இப்போது கலந்து கொள்ளவில்லை.பின் வரும் நாட்களில் ராமர் கோவிலுக்கு செல்வோம். பிரதமர் மோடி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதில் அவர் பிரதமராக கலந்து கொள்கிறார். அதில் தவறு ஏதுமில்லை.

ஆகம விதிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது.தமிழகத்தில் ஆகம விதிகள் ஒரு மாதிரியும் கேரளாவில் வேறு மாதிரியும் வட மாநிலங்களில் மற்றொரு மாதிரியும் ஆகம விதிகள் உள்ளது என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow