GOAT: சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா… GOAT-ல் விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்
வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: லியோவை தொடர்ந்து வெங்கட் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கோட் என்ற டைட்டில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யுடன் டாப் ஸ்டார் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி என்னவாக இருக்கும் என்பது பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், விஜய்யின் கேரியரில் கோட் திரைப்படம் தரமான சம்பவமாக இருக்கும் என்பது மட்டும் கன்ஃபார்மாக தெரிகிறது. இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ‘விசில் போடு’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து விரைவில் இந்தப் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது யுவன் இசையில் ரொமாண்டிக் பாடலாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கோட் படத்தில் விஜய்யுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக ஸ்பெஷல் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. க்ளைமேக்ஸ் போர்ஷனில் 15 நிமிடங்கள் கேமியோ ரோலில் நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும், அதில் விஜய்யும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
அமரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் பிஸியாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு கூட்டணியில் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன். இதுபற்றி அபிஸியல் அப்டேட் வெளியாகும் முன்னரே, வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் கேமியோவாக என்ட்ரி கொடுத்துள்ளார் எஸ்கே. மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைமில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளது, படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
What's Your Reaction?