அட்சய திருதியை நாளில் அன்னதானம் கொடுங்கள்.. தலைமுறை தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்

அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம்.

May 8, 2024 - 12:58
அட்சய திருதியை நாளில் அன்னதானம் கொடுங்கள்.. தலைமுறை தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்

ஒவ்வொரு மாதத்திலும் வருகிற அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை காலத்தில் 3வது திதியாக திருதியை திதி வருகிறது. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை திதியையே 'அட்சய திருதியை' என்று அழைக்கிறோம். இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை நாளை மே 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட் களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள் வாங்கலாம்.  

மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம். அட்சய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்க விரும்புபவர்கள் குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம். 

அட்சய திருதியை ரோகிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இன்றைய நாளில் தானம் செய்வதால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.  அன்றைக்கு தானமாக கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும். 
ரோகிணி நட்சத்திரத்துடன் வருகிற அட்சய திருதியை மிகவும் சிறப்பானது இன்றைய நன்னாளில், முடிந்தவரை உணவோ உடையோ தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் இதுவரை இருக்கின்ற செல்வம் பன்மடங்காகப் பெருகும் என்பது உறுதி!

அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும். ஒரு வியாபாரத்தை துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்வதன் மூலம் அளப்பரிய நன்மைகளை அடைய முடியும். மேலும் இந்த நாளில் தான தர்மங்கள் செய்தால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்.

அட்சய திருதியை நாளில், ஏழைகளுக்கு தயிர்சாதப் பொட்டலம் வழங்கலாம். சித்தர்கள் ஜீவசமாதி உள்ள ஆலயங்களுக்குச் சென்று புண்ணியத்தை தரும். அன்னதானம் செய்யலாம். ஆலயங்களுக்கு உங்கள் சார்பில் ஏதாவதொரு பூஜைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கித்தரலாம். வயதானவர்களுக்கு குடை வாங்கிக் கொடுங்கள். செருப்பு தானம் செய்யுங்கள்.  நீர்மோர் பானகம் வழங்கலாம். 

மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில்,  பெண்களுக்கு மஞ்சளும் குங்குமமும் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொடுத்து கூடவே ஜாக்கெட் பிட் வைத்து கொடுக்கலாம்.  அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவதும் சிறப்பாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow