பும்ராவுக்கு காயம் கொஞ்சம் சீரியஸ்.. ஐபிஎல் முடிவதற்குள் களம் திரும்புவாரா?
பும்ராவுக்கு உண்டான காயம் கொஞ்சம் சீரியஸ். பிசிசிஐ மெடிக்கல் டீம் பும்ராவின் விஷயத்தில் ரொம்ப அக்கறை செலுத்தி வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் ஒருப்புறம் பட்டையை கிளப்பி வரும் நிலையில், மும்பை அணி உட்பட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பும்ராவின் வருகை எப்போது என ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தற்போது இல்லை என்பது தான் வெளிவரும் கிரிக்கெட் வட்டார செய்திகள் மூலம் உணர முடிகிறது.
பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பும்ரா பங்கேற்கவில்லை. பெங்களூருவிலுள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் (center of excellence) பும்ராவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்னும் முழுமையாக பந்துவீச தொடங்கவில்லை என முன்னணி நாளிதழ் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பும்ரா களம் திரும்புவது எப்போது?
பிசிசிஐ சார்ந்த ஒருவர் இதுக்குறித்து தெரிவிக்கையில், “பும்ராவுக்கு உண்டான காயம் கொஞ்சம் சீரியஸ். பிசிசிஐ மெடிக்கல் டீம் பும்ராவின் விஷயத்தில் ரொம்ப அக்கறை செலுத்தி வருகிறது. பும்ராவும் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார். உடலளவில் பும்ரா தேறியுள்ளார், இருப்பினும் தன்னுடைய முழு வேகத்தில் அவர் பந்துவீச தொடங்கவில்லை. முதுகெலும்பில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவரது பணிச்சுமையினை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறோம். ஏப்ரல் மத்தியில் அவர் கிரிக்கெட் விளையாட முழுமையாக தயாராகுவார் என எதிர்ப்பார்க்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில், பும்ரா மும்பை அணியில் இணைவார் என எதிர்ப்பார்க்கபட்ட நிலையில் தற்போது பும்ராவின் வருகை கேள்விக்குறியாகியுள்ளது. ஐபிஎல் தொடருக்குப் பின் இந்தியா இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்குள் பும்ரா முழு உடல்நலன் தேறி களத்திற்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
Read more: Bhuvneshwar Kumar: சத்தமில்லாமல் ப்ராவோ சாதனையினை சமன் செய்த புவனேஷ்வர் குமார்!
What's Your Reaction?






