தொடர்ந்து உயரும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்வு
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை. 2 தினங்களாக உயர தொடங்கியுள்ளது. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக குறைந்துவந்த தங்கம், தற்போது உயர தொடங்கி உள்ளது நகைப்பிரியர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.350 உயர்ந்து ரூ.13,600-ஆக உள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் நேற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரனுக்கு தங்கம் ரூ.1.09,360 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நிலவிய விலை வீழ்ச்சிக்குப் பிறகு,கடந்த 2 நாட்களாக ஏற்பட்டுள்ள இந்த உயர்வு நகை ப்ரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?

