இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆர்சிபி அணி கிரிக்கெட் வீரர் ரகசிய திருமணம்

ஆர்.சி.பி. அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது இரண்டு பெண்கள் பாலியல் ரீதியாக புகார் அளித்து உள்ளனர். இந்த நிலையில், தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆர்சிபி அணி கிரிக்கெட் வீரர் ரகசிய திருமணம்
ஆர்சிபி அணி கிரிக்கெட் வீரர் ரகசிய திருமணம்

ஐபிஎல்லின் 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில்  வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளும் இடம்பிடித்துள்ளார். இவர் மீது இரண்டு பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருமண ஆசை காட்டி சுமார் 5 ஆண்டுகள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவர் மீது புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதேபோல், கிரிக்கெட்டில் பயிற்சி அளிப்பதாக கூறி 2023ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெய்ப்பூரிலும் யாஷ் தயாள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் யாஷ் தயாளுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. 

இந்த நிலையில், யாஷ் தயாள் தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இருதரப்பினருக்கான உறவுகள் மட்டுமே கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த திருமணம் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow