எப்போது குறையும் தங்க விலை..? 9 நாட்களில் ரூ.2,480 உயர்வு..! இன்றைய விலை நிலவரம் இதோ...
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுமுகத்தில் உள்ள தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, உற்பத்தி குறைவு, நிறுவனங்களின் பங்கு சந்தை வீழ்ச்சி, ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-காசா யுத்தங்கள் என பல காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயந்து வருவதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இம்மாதம் 1-ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரு.46,720 விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.49,200-க்கு விற்பனையாகிறது.
9 நாட்களில் கிட்டத்தட்ட ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,480 வரையிலும், கிராமுக்கு ரூ.310 வரையிலும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 4-ம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,200-க்கும் கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,150-க்கும் விற்பனையாகிறது.
அதேப் போல வெள்ளியின் விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.0.20காசுகள் அதிகரித்து, ரூ.79.20-ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.200 அதிகரித்து ரூ.79,200-ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் என்பது தொடர்ந்து அதிகரிக்கும் எனவும், தங்கம் வாங்க விரும்புவோர் சில நாட்கள் காத்திருப்பது நல்லது எனவும் கூறுகின்றனர் தங்க மதிப்பீட்டாளர்கள்.
What's Your Reaction?