ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.2240 சரிவு 

ஜெட் வேகத்தில் குறையும்  தங்கத்தின் விலை. மாலையில் மீண்டும் சவரனுக்கு ரூ.2240 குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.2240 சரிவு 
சவரனுக்கு ரூ.2240 சரிவு 

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல், வெள்ளி விலையும் அதிகரித்தன. இருப்பினும், பிப்ரவரி மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிந்தன. மேலும், அவற்றின் விலைகள் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. 

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களால், மார்ச் 1 அன்று தங்கத்தின் விலை மீண்டும் விண்ணை முட்டியது. அந்த நேரத்தில், தங்கத்தின் விலை ரூ.2 லட்சத்தை தொடும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக தங்கம் விலை சரிந்து வருகிறது. 

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ 5360 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,03,600-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.670 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,950-க்கு விற்பனை ஆனது. இதே போல் வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.15 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.280 குறைந்து ரூ.12,670க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் 2,240 சரிந்தது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து உள்ளது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow