மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்: சவரனுக்கு ரூ. 400 உயர்வு
தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு சற்றே சோக செய்தியாக அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அதிரடியாகச் சரிந்து வந்த தங்கத்தின் விலை, சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் மதிப்பைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.
சர்வதேச அளவில் நிலவும் சூழலால் கடந்த ஒரு வாரமாகத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்து வந்தது. குறிப்பாகச் சென்னையில் கடந்த வாரம் மட்டும் சவரனுக்கு ரூ. 2,960 வரை சரிந்தது. இந்த வாரத் தொடக்கத்திலும் மார்ச் 16 முதல் மார்ச் 18 வரை நாள்தோறும் விலை குறைந்த வண்ணமே இருந்தது.
நேற்று தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. காலையில் சவரனுக்கு ரூ. 2,160 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 3,200 குறைந்து சவரன் ரூ. 1,11,200-க்கு விற்பனையானது. ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ. 5,360 குறைந்ததால் நகை வாங்குவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவியது.
தொடர் சரிவுக்குப் பிறகு, இன்று (மார்ச் 20) காலை தங்கத்தின் விலை மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,10,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 13,850 ஆக உள்ளது.
தங்கத்தின் விலை சற்று உயர்ந்தாலும், வெள்ளியின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. கிலோவுக்கு ரூ. 5,000 சரிந்துள்ளதால், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 2,60,000 ஆகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 260 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

