சற்றே ஆறுதல் தரும் செய்தி: தங்கம், வெள்ளி விலை குறைவு
தொடர்ந்து விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.
இந்த வாரத்தின் தொடக்க நாளே முதல் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் சவரன் ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. தங்கத்துடன் போட்டி போட்டு கொண்டு வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.400 தாண்டி விற்பனை ஆகி வருகிறது.
நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.9,520 உயர்வு புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ1,34,400 ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16,800, நேற்று ஒரே நாளில் கிராம் ரூ.1,190 உயர்வு. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வெள்ளியும் கிராமுக்கு ரூ.25 உயர்வு. ஒரு கிராம் வெள்ளி ரூ.425 விற்பனை. ஒரு கிலோ வெள்ளி ரூ,4,25,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த வந்த தங்கம், வெள்ளி விலை இன்றைய தினம் சற்றே குறைந்து உள்ளது.
இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.4,800 விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.600 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.16,200-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.1,29,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று இன்று வெள்ளி கிராம் ரூ.10 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.415 விற்பனை ஆகிறது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.4,15,000 விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

