2-வது நாளாக தங்கம் விலை குறைவு: சவரனுக்கு ரூ.480 சரிவு, நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி 

தங்கம் சவரனுக்கு ரூ.480 சரிந்துள்ளது. 2-வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

2-வது நாளாக தங்கம் விலை குறைவு: சவரனுக்கு ரூ.480 சரிவு, நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி 
சவரனுக்கு ரூ.480 சரிவு, நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி 

சர்வதேச சந்தையில் டாலர் குறியீட்டின் வலுவே தங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்க புள்ளிவிவரங்கள் இன்னும் கவலை அளிப்பதால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் (ஃபெடரல்) வட்டி விகிதங்களைக் குறைப்பதைத் தடுத்து வருகிறது. வட்டி விகிதங்கள் உயரும் போது, டாலருக்கான தேவை அதிகரிக்கிறது. இதன் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. 

வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,710 -க்கு விற்பனை செய்யப்பட்டது.  இதே போன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.276-க்கு விற்பனை ஆனது. கிலோவிற்கு ரூ.4 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,76,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ 60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.280 விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.4 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow