தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ 1,280 உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி 

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ 1,280 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு இன்றும் தங்கம் விலை உயர்வு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ 1,280 உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி 
தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ 1,280 உயர்வு

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,450-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,07,600 உயர்ந்து விற்பனை ஆனது. இதே போன்று வெள்ளி கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, கிராம் வெள்ளி ரூ.318-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.8 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,18,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,610-க்கும் சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்துக்கு போட்டி போடும் வகையில் வெள்ளியும் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 330 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow