Bank Holidays: ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி இயங்கும்?

டிஜிட்டல் யுகமானாலும் பண பரிவர்த்தனை தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்கு இன்னும் வங்கிகளை நேரடியாக அணுக வேண்டிய சூழ்நிலை தான் நிலவுகிறது. அந்த வகையில், வருகிற ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாள் செயல்படும்? என்பதனை இந்த பகுதியில் காண்போம்.

Bank Holidays: ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி இயங்கும்?
Bank Holidays of april 2025

புதிய நிதியாண்டின் தொடக்க மாதமான ஏப்ரல் மாதத்தில் புனித வெள்ளி, அம்பேத்கர் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி உட்பட இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களில் வாராந்திர விடுமுறை தவிர்த்து மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை வருகிறது. சில விடுமுறை ஒரு குறிப்பிட்ட மாநிலங்கள்/பிராந்தியங்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்க. விடுமுறை தினங்களின் விவரம் பின்வருமாறு.

ஏப்ரல் 1 - பொது விடுமுறை: ஏற்கெனவே குறிபிட்டது போல், சென்ற நிதியாண்டின் வருடாந்திர கணக்குகளை மூடவும், புதிய நிதியாண்டிற்கான கணக்குகளை அன்றைய தினம் தொடங்குவதால், ரிசர்வ் வங்கி இந்தியா முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. 

ஏப்ரல் 5 - பாபு ஜகஜீவன் ராம் பிறந்தநாள்: பாபு ஜகஜீவன் ராம் ஜெயந்தியை முன்னிட்டு ஹைதராபாத் மற்றும் தெலங்கானா பிராந்தியங்களில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் துணைப் பிரதமராக பதவி வகித்தவர் ஜகஜீவன் ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வருடப்பிறப்பு:

ஏப்ரல் 10 - மஹாவீர் ஜெயந்தி - பொது விடுமுறை
ஏப்ரல் 14-  அம்பேத்கர் ஜெயந்தி/ தமிழ் வருடப்பிறப்பு - பொது விடுமுறை
ஏப்ரல் 15- ஹிமாச்சல் நாள் - ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை 
ஏப்ரல் 18- புனித வெள்ளி- பொது விடுமுறை
ஏப்ரல் 21 - கரியா பூஜா - திரிபூரா மாநிலத்திலுள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
ஏப்ரல் 29 - மஹரிஸி பரசுராம் ஜெயந்தி- குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இயங்கும் வங்கிகளுக்கு விடுமுறை 
ஏப்ரல் 30 - பஷாவா ஜெயந்தி- கர்நாடகா மாநிலங்களுக்கு மட்டும் விடுமுறை

மேற்குறிப்பிட்ட நாட்களைத் தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் 2, 4 வது சனிக்கிழமை இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொது விடுமுறையாகும். இதனடிப்படையில் உங்கள் வங்கி செயல்பாடுகளை திட்டமிட்டு பயனடையவும்.

Read more: Gold rate Today: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை..சம்பள கவர் பத்திரம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow