உச்சம் தொட்ட தங்கம் விலை .. ரூ 53,000 ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம்.. கலக்கத்தில் இல்லத்தரசிகள்

உச்சம் தொட்ட தங்கம் விலை .. ரூ 53000 ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம்.. கலக்கத்தில் இல்லத்தரசிகள்

Apr 6, 2024 - 10:14
Apr 6, 2024 - 12:10
உச்சம் தொட்ட தங்கம் விலை .. ரூ 53,000 ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம்.. கலக்கத்தில் இல்லத்தரசிகள்

தங்கம் இந்திய பெண்களின் மிகச்சிறந்து முதலீடு. அவசரத்திற்கு தங்கம் உதவும் என்பதற்காகவே அதன் மீது முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டு காலமாகவே தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு சவரன் 25000 ஆக இருந்த நிலையில் தற்போது தங்கம் ஒரு சவரன் 53 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டியது. கடந்த ஒரு வார காலத்தில் ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் வரை உயர்ந்தது.

தினம் தினம் தங்கம் விலை உயர்ந்தாலும் சில நாட்கள் குறைந்தது. இன்றைய தினம் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தினம்  ஒரு கிராம் தங்கம் 105 உயர்ந்து ரூ.6,615 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 840 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் 52,920 ஆக விற்பனையாகிறது. 
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் தங்க நகை வாங்கும் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். 

சர்வதேச சந்தையிலேயே தங்கத்தின் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.40 ரூபாயாக உள்ளது. இதுவும் இந்தியாவில் தங்கம் விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow