சரியத் தொடங்கிய தங்கம் விலை... நிம்மதியில் பொதுமக்கள்...
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை சரியத் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இம்மாத தொடக்கம் முதலே ஏறு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு ரூ.49,000 தாண்டி விற்பனையாகி வந்தது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்பு தொடர்பாக நீடிக்கும் சந்தேகமும், ஆசியாவின் தங்கத் தேவையும் அவ்வப்போது மாறுவதால், தங்கத்தின் மீதான முதலீடுகளில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று (மார்ச் 16), ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,920-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,125-க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த 7-ம் தேதியில் இருந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை, நேற்று (மார்ச் 15) முதல் குறைந்து வருகிறது.
தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வெள்ளி கிராமுக்கு ரூ.0.30 காசுகள் உயர்ந்து ரூ.80.30-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.80,300-க்கும் விற்பனையாகி வருகிறது.
What's Your Reaction?