மீண்டும் மீண்டுமா...?! தங்கம் விலை உயர்வு...
19 நாட்களில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் தங்கம் விலை ரூ.2,360 உயர்ந்துள்ளது.
கடந்த 2 நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இம்மாத (மார்ச்) தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சரிவை சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சென்னையில் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,135-க்கும், ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.49,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையைப் போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.0.30 காசுகள் உயர்ந்து ரூ.80.30-க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் 1-ம் தேதியில் ரூ.46,720-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், 19 நாட்களில் ரூ.2,360 உயர்ந்துள்ளது. கடந்தாண்டின் இதே காலத்தை (மார்ச் 19, 2023) ஒப்பிடுகையில், ரூ.44,480-ஆக இருந்த தங்கத்தின் விலை, தற்போது (மார்ச் 19, 2024) ரூ.4,600 அதிகரித்துள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வருவதால், நகை வாங்குபவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
What's Your Reaction?