”10ஆண்டில் பல உயரங்களை எட்டியுள்ளோம்”... தேர்தல் தேதி அறிவிப்பு நேரத்தில் காய் நகர்த்தும் பிரதமர்! 

வரலாற்று சிறப்புமிக்க முன்னெடுப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். 

Mar 16, 2024 - 12:15
”10ஆண்டில் பல உயரங்களை எட்டியுள்ளோம்”... தேர்தல் தேதி அறிவிப்பு நேரத்தில் காய் நகர்த்தும் பிரதமர்! 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், 10ஆண்டுகளில் அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பல சாதனைகளை குறிப்பிட்டும், மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மக்களுடனான தனது உறவு ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யும் வாயிலில் இருப்பதாக சுட்டிக்காட்டிய, 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும் ஆதரவும் தனக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கிறது என தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாழ்கையில் பெரிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனை எனவும் அவர் தெரிவித்தார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, மாத்ரு வந்தனா யோஜனா போன்ற பல திட்டங்கள் வளர்ச்சியைப் பெற சாத்தியமானது எனக்கூறிய பிரதமர், பாரம்பரியம் மற்றும் நவீனம் ஆகிய இரண்டு முறையிலும் கவனம் செலுத்தி இந்தியா முன்னேறி வருவதாகக் கூறினார்.

ஜிஎஸ்டி, ஆர்டிகல் 370 ரத்து, முத்தலாக்கிற்கான புதிய சட்டம், நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க நாரி சக்தி வந்தான் போன்ற வரலாற்று சிறப்புமிக்க முன்னெடுப்புகளும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். 

இறுதியாக, லட்சியத் திட்டங்களை வகுக்கவும், அதனை செயல்படுத்தவும் மக்களின் ஆதரவே தனக்கு பலத்தை அளிப்பதாகவும் அவர் கூறினார். மேலும், நாம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம் எனவும் பிரமர் மோடி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow