Google pixel 10 series launch: என்ன மக்கா ரெடியா? சந்தைக்கு வரும் கூகுள் பிக்சல் 10 சீரிஸ்
கூகுள் நிறுவனம் pixel 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து, Pixel Watch 4 மற்றும் updated Pixel Buds போன்றவற்றையும் நாளை (ஆகஸ்ட் 21 ஆம் தேதி) அறிமுகப்படுத்த உள்ளது. போன் விலை தொடர்பான விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக மொபைல் போன் தயாரிப்பில் குதித்தது கூகுள் நிறுவனம். ஆனால், தற்போது வரை தனக்கான பிரத்யேக இடத்தை அடைய முடியாமல் திணறி வருகிறது. இதனிடையே இன்று இந்திய நேரப்படி 10:30 மணியளவில் நியூயார்க் நகரில் Google pixel 10 சீரிஸ் போன் மாடலை அறிமுகப்படுத்துகிறது கூகுள் நிறுவனம்.
இந்தியாவில் நாளை Google pixel 10 சீரிஸ் போன் மாடல் அறிமுகம் தொடர்பாக பிரத்யேக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Google pixel 10 சீரிஸில் மொத்தம் நான்கு மாடல்கள் வெளியாகவுள்ளது: பிக்சல் 10, பிக்சல் 10 Pro, பிக்சல் 10 Pro XL, மற்றும் பிக்சல் 10 Pro Fold. இந்தச் சாதனங்கள் அனைத்தும், கூகுளின் புதிய டென்சர் G5 சிப்செட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 4 மாடல்களின் விலை தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசியத் தொடங்கியுள்ளன. அதனை பல்வேறு டெக் வல்லுநர்களும் ஊடகங்கள் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளனர். அதன் விவரங்கள் பின்வருமாறு- (இந்திய ரூபாய் மதிப்பு தோரயமாக குறிப்பிடப்பட்டுள்ளது)
Google Pixel 10:
128 GB - $799 (₹69,500)
256 GB - $899 (₹78,200)
Google Pixel 10 Pro:
128 GB - $999 (₹87,000)
256 GB - $1099 (₹95,500)
512 GB - $1219 (₹1,06,000)
1 TB - $1449 (₹1,26,000)
Google Pixel 10 Pro XL:
256 GB - $1199 (₹1,04,500)
512 GB - $1319 (₹1,15,000)
1 TB - $1549 (₹1,34,500)
Google Pixel 10 Pro Fold:
256 GB - $1799 (₹1,56,500)
512 GB - $1919 (₹1,67,000)
1 TB - $2149 (₹1,87,000)
Google pixel 10 சீரிஸின் பேஸ் மாடலான, பிக்சல் 10 மாடல் 6.3-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளேவுடன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate) மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Gorilla Glass Victus 2) பாதுகாப்பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் 10 Pro வகைகள், LTPO display அம்சத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பொதுவாக பிக்சல் போன்களில் நீடித்து உழைக்கும் பேட்டரி திறன் இருந்தாலும், போன் அடிக்கடி சூடாகிறது என்கிற புகார் வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ளது. அதனை இந்த பிக்சல் 10 மாடல்களில் சரிசெய்ய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிக்சல் 10 மாடல் இண்டிகோ வண்ணங்களிலும், பிக்சல் 10 Pro வகைகள் மூன்ஸ்டோன், ஜேட் வண்ணங்களிலும் கிடைக்கும்.
வாட்ச் மற்றும் பட்ஸ் வெளியீடு:
ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து, கூகுள் நிறுவனம் Pixel Watch 4 மற்றும் updated Pixel Buds போன்றவற்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் தனது AI தொழில்நுட்பமான ஜெமினியினை பன்மடங்கு மேம்படுத்தியுள்ள நிலையில், அதன் செயல்பாடுகளை கூகுள் பிக்சல் 10 சீரிஸில் பயன்படுத்தியுள்ளது,
புதிய மாடல் வெளியீட்டு நிகழ்வு கூகிளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளை முறைப்படி அறிமுகப்படுத்தப்படும் நிலையில், விலையில் ஏதேனும் சலுகை வழங்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேப்போல், Google pixel 10 சீரிஸ் மொபைல் சந்தைகளில் நல்ல வரவேற்பினை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?






