அதிக அளவில் ஜி.எஸ்.டி வசூல்.. 11.7 சதவீதம் வளர்ச்சி கண்ட நிதியாண்டு..

11.7 percent growth

Apr 3, 2024 - 08:05
அதிக அளவில் ஜி.எஸ்.டி வசூல்.. 11.7 சதவீதம் வளர்ச்சி கண்ட நிதியாண்டு..

2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை உள்ள நிதியாண்டில் ரூ.20.14 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் செய்தி குறிப்பில் தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் இது கடந்த நிதியாண்டை விட 11.7 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது.

விற்பனையாளர்க்கும் வாடிக்கையாளர்க்கும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த ஜி.எஸ்.டி. முதலில் இதற்கு மக்களிடையே எதிர்ப்பு இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இதன் உண்மை தன்மையை புரிந்து கொண்ட மக்கள் வரி செலுத்துவதில் நேர்முக தன்மையை கையாள தொடங்கியுள்ளனர்.இதன் காரணமாக தான் தொடர்ந்து 5வது மாதமாக ரூ.1 லட்சம் கோடியை கடந்து ஜி.எஸ்.டி வசூலாகி புதிய சாதனையை படைத்துள்ளது.

2024ம் ஆண்டின் மொத்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உள்ளது.மேலும் மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.1.78லட்சம் கோடி வசூலாகி புதிய சாதனையை படைத்துள்ளது வரவேற்க தக்க விசயமாகவே பார்க்கப்படுகிறது. உள்நாட்டு பரிவர்த்தனைகளில் இருந்து பெறப்படும் ஜி.எஸ்.டி வசூலானது ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow