ஏறுமுகத்தில் தங்கம்: சவரனுக்கு ரூ. 240 உயர்வு: வெள்ளி கிலோ ரூ 8 ஆயிரம் உயர்வு 

நேற்றைய தினம் தங்கம் விலை சற்றே குறைந்து ஆறுதல் அளித்த நிலையில், இன்று தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. அதே போன்று வெள்ளியும் வரலாறு காண வகையில் கிலோ ரூ 8 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

ஏறுமுகத்தில் தங்கம்: சவரனுக்கு ரூ. 240 உயர்வு: வெள்ளி கிலோ ரூ 8 ஆயிரம் உயர்வு 
Gold in seven faces

தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் சர்வதேச சந்தையின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுகிறது. தொடர் ஏறுமுகத்தில் இருந்த தங்கம் இன்று விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 10) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.  

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 96,000-க்கும் கிராமுக்கு ரூ. 40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.199-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.1.99 லட்சத்துக்கும் விற்பனையானது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,030க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.207க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 உயர்ந்து கிலோ ரூ.2.07 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஏற்றம் நகைப்பிரியர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow