கிடு கிடுவென உயரும் தங்கம்: சவரனுக்கு ரூ.2,800 உயர்வு: வாடிக்கையாளர்கள் ஷாக்
தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,610-க்கும் சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்துக்கு போட்டி போடும் வகையில் வெள்ளியும் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 330 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.350 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.3,40,000-க்கும், கிராமுக்கு ரூ.8அதிகரித்து. ஒரு கிராம் ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் பங்கு சந்தையில் வீழ்ச்சியே தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு முக்கியகாரணம் என சொல்லப்படுகிறது.
What's Your Reaction?

