ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை: சவரனுக்கு ரூ 160 உயர்வு 

தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இன்று தங்கம் சவரனுக்கு 120-ம், வெள்ளி கிலோ ரூ ஆயிரமும் உயர்ந்து வாடிக்கையாளர்களை கவலை அடைய செய்துள்ளது. 

ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை: சவரனுக்கு ரூ 160 உயர்வு 
Gold, silver on the rise

நேற்றைய முன் தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிலோ ரூ 3 ஆயிரம் விலை உயர்ந்து விற்பனை ஆனது. 

நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,800-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.244-க்கும் விற்பனையாகிறது. கிலோ வெள்ளி ரூ 10 ஆயிரம் உயர்ந்து உள்ளது. 

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. தங்கம் விலை கடந்த 4 நாட்களில் 3,360 அதிகரித்துள்ளது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் 245-க்கும், கிலோவுக்கு ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow