இரண்டு மாடல்களில் Apple MacBook air 2025: சிறப்பம்சங்கள் என்ன? எவ்வளவு விலை?
M4 சிப் உடன் தயாரிக்கப்பட்டுள்ள ஆப்பிள் மேக்புக் ஏர் இந்தியாவில் மார்ச் 12 முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேட்ஜட் உலகில் ஆப்பிள் என்பது வெறும் பெயரல்ல, அது ஒரு பிராண்ட் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அதிநவீன வசதிகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள ஆப்பிள் மேக்புக் ஏர் இந்திய சந்தைகளில் என்ன விலைக்கு கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேக்புக் ஏர் (2025), இதற்கு முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில் என்ன மாதிரியான சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது என்பதை பின்வரும் பகுதியில் காணலாம்.
ஆப்பிள் நிறுவனம் தனது தொடக்க நிலை மடிக்கணினி மாடலான மேக்புக் ஏரினை, கடந்தாண்டு வெளியிட்ட ஐபேட் ப்ரோ (2024) இல் இடம்பெற்றிருந்த 10-கோர் M4 சிப் அம்சங்களை உள்ளடக்கி புதுப்பித்துள்ளது. மேக்புக் ஏர் (2025) அதன் முந்தைய மாடல்களினைப் போலவே 13-இன்ச் மற்றும் 15-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே (Display) வசதியுடன் கிடைக்கிறது.
இந்தியாவில் என்ன விலை?
இந்தியாவில் 16 GB RAM மற்றும் 256 GB சேமிப்பு கொள்ளளவு (storage) மற்றும் 13-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் கூடிய MacBook Air (2025) மாடல் ரூ.99,900-லிருந்து கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல், 16 GB RAM மற்றும் 256 GB சேமிப்பு கொள்ளளவு (storage) & 15-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் கூடிய MacBook Air (2025) மாடல் ரூ.1,24,900-லிருந்து கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய மேக்புக் ஏர் மாடலுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. மிட்நைட், சில்வர், ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்டார்லைட் போன்ற வண்ணங்களில் சந்தைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
MacBook Air (2025) சிறப்பம்சங்கள் என்ன?
Display size: 13 இன்ச்(2,560×1,664 pixels) & 15-inch (2,880×1,864 pixels) (Super Retina display)
pixel density: 224ppi and up to 500nits peak brightness
சேமிப்புத்திறன்: 24 GB வரை RAM அதிகரித்துக் கொள்ள இயலும். அதைப்போல் கொள்ளளவினை 2TB வரை அதிகரித்துக் கொள்ள இயலும்.
வை-பை & புளூடூத்: Wi-Fi 6E மற்றும் புளூடூத் 5.3 வசதி உள்ளது.
எடை: 1.24 கிலோ
கேமரா: 12 MP
பேட்டரி: 13-இன்ச் மேக்புக் ஏர் 53.8Wh லித்தியம்-பாலிமர் பேட்டரியைக் கொண்டுள்ளது, 70W சார்ஜிங் திறன் தன்மையுடையது.இந்த மாடல் 30W USB டைப்-சி பவர் அடாப்டருடன் வருகிறது. 15-இன்ச்சினை பொறுத்தவரை 66.5 Wh பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் பயன்படுத்தலாம். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இணைய சேவையில் தொடர்ந்து 15 மணி நேரம் இயக்க முடியும். அதைப்போல் 18 மணி நேரம் தொடர்ந்து வீடியோவினை பார்க்க இயலும்.
டச் ஐடி பொத்தான்:
கூடுதல் சிறப்பம்சமாக புதிய மேக்புக் ஏர் மாடலில் மடிக்கணினியைத் திறக்க அல்லது ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் ஏதேனும் வாங்க கூடுதல் பாதுகாப்பு அம்சத்திற்காக டச் ஐடி பொத்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
MacBook Air (2025) மாடலுக்கான முன்பதிவு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வரை விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் பன்மடங்கு ஆப்பிள் மேக்புக் ஏரில் மேம்படுத்தப்பட்டுள்ளதும் இதனை வாங்க பலரை தூண்டியுள்ளதாக டெக் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Read more:
xiaomi 15 ultra: புதிய போன் மாடலுக்கு இந்தியாவில் என்ன விலை? அப்படி என்ன வசதி இருக்கு?
உடல் பருமனால் அவதிப்பட போகும் இந்தியர்கள்: லான்செட் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்
What's Your Reaction?






