லேடீஸ் ஹாப்பி அண்ணாச்சி ! தங்கம்,வெள்ளி விலை அதிரடி சரிவு
தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மற்றும் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக அமைந்துள்ளது.
நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ₹1,680 என அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,06,800 என்ற நிலைக்கு வந்துள்ளது. அதேபோல், கிராமுக்கு ₹210 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,350-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளி விலையும் நேற்று வீழ்ச்சியடைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 வரை சரிந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1680 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.210 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.230-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,30,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருவது நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?













