குரு பெயர்ச்சி பலன் 2024: சனி பார்வையை விட்டு விலகும் குரு.. 6 ராசிக்காரர்களுக்கு அடி தூள்!

குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு வரும் மே 1ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானால் சில ராசிக்காரர்களுக்கு குரு பலன் வரப்போகிறது. குரு பலன் கிடைப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

Apr 25, 2024 - 18:10
குரு பெயர்ச்சி பலன் 2024: சனி பார்வையை விட்டு விலகும் குரு.. 6 ராசிக்காரர்களுக்கு அடி தூள்!

குருபெயர்ச்சி எப்போது?: குருபகவான்  காலபுருஷ தத்துவப்படி ராசி மண்டலத்தில் இரண்டாம் வீட்டிற்கு சென்று அமரப்போகிறார். ராகுவை விட்டு விலகிய குரு, சனி பார்வையில் இருந்தும் விலகி சுபத்துவம் அடைகிறார்.  குரு ரிஷப ராசியில் இருந்து தனது 5ஆம் பார்வையால் கன்னி ராசியையும். 7ஆம் பார்வையால் விருச்சிக ராசியையும் பார்க்கிறார். 9 ஆம் பார்வையால் மகர ராசியையும் பார்வையிடுகிறார்.

மேஷம்: தன ஸ்தானத்திற்கு வரப்போகும் குரு பகவானால் வருமானம் அதிகரிக்கும்.  பட்ட கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடம்பும் மனதும் புத்துணர்ச்சியடையும்.  தன ஸ்தானம், வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து குரு உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான கடன் ஸ்தானம், 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானம், 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது.  உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். உற்சாகமான குருப்பெயர்ச்சி இதுவாகும்.  

ரிஷபம்: ஜென்ம குருவாக பயணம் செய்யப்போகிறார். கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.  உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, 9ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவது சிறப்பான அம்சமாகும். கல்யாண வைபோகம் தேடி வரப்போகிறது. 

கடகம்:   குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பான அம்சமாகும்.  குரு பலன் வந்து விட்டது. குரு பார்வையால் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். அஷ்டம சனி காலம் என்றாலும் கவலை வேண்டாம்.. குரு அள்ளிக்கொடுக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது.  

கன்னி: மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது.  பாக்கிய குருவாக 9ஆம் இடத்தில் பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்களுக்கு குரு பலன் வந்து விட்டது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். ராசிக்கு 3ஆம் வீடு, 5 ஆம் வீடுகளின் மீது குரு பகவானின் பார்வை படுவதால் முயற்சிகள் வெற்றியடையும், கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது.

விருச்சிகம்:  இந்த குருப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தை தரக்கூடியது. ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து தனது ஏழாம் பார்வையால் விருச்சிக ராசியை பார்க்கிறார் குருபகவான். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். குருபலன் வந்து விட்டது திருமணம் கைகூடி வரும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். பாக்கெட் நிறைய பணம் வரும். கோடி கோடியாக தேடி வரும் செல்வத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள். 

மகரம்:  குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். குரு பலன் வந்து விட்டதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலையில் உங்களுக்கு புரமோசன் கிடைக்கப்போகிறது. சம்பள உயர்வு இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு மே மாதம் முதல் லட்சுமி கடாட்சம் வரப்போகிறது. குரு பெயர்ச்சி உங்களுடைய வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. 

மீனம்: உங்கள் ராசிநாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் மறையப்போகிறார்.  குரு மறைந்தாலும் அவரது பார்வையானது 11ஆம் வீடான லாப ஸ்தானம். 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானம், 7ஆம் இடமான களத்திர ஸ்தானங்களின் மீது விழுவதால் கோடீஸ்வர யோகம் உங்களுக்கு தேடி வரப்போகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow