முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.2120  குறைவு

கடந்த வாரம் உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.2120 குறைந்து உள்ளது நகைப்பிரியர்களுக்கு சந்தோஷமான செய்தியாக அமைந்துள்ளது. 

முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.2120  குறைவு
தங்கம் சவரனுக்கு ரூ.2120  குறைவு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கடந்த வாரம் தங்கம் விலை கடும் விலை உயர்வை கண்டது. வெள்ளியும் விலை ஏற்றம் கண்டது. இது நகைப்பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

நேற்றைய தினம் காலை தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,25,200-க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியை பொறுத்தவரை விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ.315-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் தங்கம் விலை சரிவை கண்டது.

இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,21,600க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.295 க்கும், கிலோவிற்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2.95 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow