உயரே பறக்கும் தங்கம்.. அம்மாடியோவ்.. ஒரு சவரன் தங்கம் ரூ.55,000 ஐ எட்டியது

ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ரூ. 54,960 ஆக விற்பனையாகிறது. தங்கத்தின் விலை அரை லட்சத்தை தாண்டி விற்பனையாகிறது.

Apr 16, 2024 - 10:09
உயரே பறக்கும் தங்கம்.. அம்மாடியோவ்.. ஒரு சவரன் தங்கம் ரூ.55,000 ஐ எட்டியது


தங்கத்துக்கும், இந்தியர்களுக்கும் இடையேயான உறவு பல நூற்றாண்டுகள் பழைமையானது. காலம் காலமாக இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வந்துள்ளனர். தீபாவளி, அட்சய திருதியை போன்ற பண்டிகை நாள்களில் கொஞ்சமாவது தங்கத்தை வாங்கி வைக்கின்றனர். இன்றைக்கு தங்கம் விற்கும் விலையில் ஏழைகளுக்கு தங்கம் எட்டாக்கனியாகுமோ என்ற அச்சம் எழுந்தாலும் நகைகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் நகைக்கடைகளை நாடி செல்கின்றனர். 

பழங்காலத்திலிருந்தே, தங்கம் அல்லது தங்க நகைகள் பெண்களுடனும் இந்திய குடும்பங்களுடனும் பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டுள்ளன. ஏறக்குறைய ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் தங்க நகைகளை வைத்திருப்பது செல்வம் மற்றும் கௌரவத்தின் சின்னமாகக் கருதப்படும் தங்கம், இந்தியாவில் அதன் முதலீட்டு மதிப்புக்காகவும் மதிக்கப்படுகிறது.

தங்கத்தை ஒரு சேமிப்பாக மட்டுமல்லாமல், அந்தஸ்துக்கான பொருளாகவும் இந்திய மக்கள் பார்க்கின்றனர். தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும்கூட, நகைக் கடைகளில் தங்க நகைகளின் வியாபாரம் அனல் பறக்க நடந்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாத இறுதியில் ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. இந்த நிலையில் 15 நாட்களில் ஒரு சவரன் தங்கம் 5 ஆயிரம் உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் சென்னையில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 80 விலை உயர்ந்து ரூ 6,870 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ. 54,960 ஆக விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 90ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தினம் தினம் உயர்ந்து வருவது நகை வாங்குபவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow