ஹய் ஜாலி, தங்கம் ரேட் குறைஞ்சிடுச்சு! சவரனுக்கு ரூ.640 சரிவு
நேற்றைய தினம் தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை கடும் உச்சத்தை தொட்டு வந்தது. 1 லட்ச ரூபாயை தாண்டி தங்கம் சவரனுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த சில நாட்களாக நகைப்பிரியர்களுக்கு கவலை அளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருந்தது. இன்று தங்கம் விலை சற்றே குறைந்து ஆறுதல் அளித்து இருக்கிறது.
நேற்றைய முன் தினம் தங்கம் விலை சரிவை சந்தித்தது. சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,840 ஆக விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,320 விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை ஆனது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய தினம் தங்கம் மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.2160 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,500 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.270 விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.640 குறைந்து, தங்கம் ஒரு சவரன் ரூ.1,15,360 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 80 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

