அட்சய திருதியை நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை வாங்கப்போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அட்சய திருதியையை முன்னிட்டு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்ந்தது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 720 ரூபாய் உயர்ந்து 53,640 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 1300 ரூபாய் உயர்ந்து 90000 ரூபாயாக உள்ளது.

May 10, 2024 - 11:47
அட்சய திருதியை நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை வாங்கப்போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று எந்தப் பொருளை வாங்கினாலும் அது பல்கிப் பெருகும் என்பது ஐதீகம். இதை முன்னிட்டு, நாடு முழுவதும் மக்கள் இந்த நாளில் தங்க நகைகளை வாங்குவார்கள். இதனால், அட்சய திருதியை முன்னிட்டும், குறிப்பாக அந்த நாளிலும் தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்படும். 

தங்கம், புத்தாடைகள் என அனைத்து விதமான வியாபாரமும் ஜே ஜே என்று நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை இன்று (மே 10) கடைபிடிக்கப்படுகிறது. இன்று காலை 4.15 மணிக்கு தொடங்கும் அட்சய திருதியை, மே 11-ம் தேதி மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது. அதில் குறிப்பாக 2 நாட்களும், காலை 5.33 முதல் மதியம் 12.18 வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது தகுந்த நேரம் என்று கூறப்பட்டுள்ளது. 

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதற்கு காலை முதலே மக்கள் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. 
அட்சய திருதியையை முன்னிட்டு, சென்னையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 720 ரூபாய் உயர்ந்து 53,640 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 1300 ரூபாய் உயர்ந்து 90000 ரூபாயாக உள்ளது. 

நடப்பாண்டில் தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 55000 வரை விற்பனையானது. கடந்த ஒரு வார காலமாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை அட்சய திருதியை தினமான இன்று இரண்டு முறை உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 

தங்கம் விலை அடுத்த 1 வருடத்தில் 1 லட்சத்தை தொடும் என்று கணிப்புகள் வெளியான நிலையில் மக்கள் தங்கம் மீது முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தனர் இன்று அட்சய திருதியை என்பதால் தங்கத்திற்கான டிமாண்ட் மற்றும் விலை அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்வதேச சந்தையில் 10 நாட்களுக்கு பின்பு 2350 டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது. இதன் வாயிலாக தங்கம் விலை இந்திய சந்தையில் தடாலடியாக உயர்ந்துள்ளது. 

தங்கம் விலை ஒவ்வொரு நகரங்களிலும் மாறுபடும், இதேபோல் நீங்கள் வாங்கும் நகைக்கு ஏற்றார் போல் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவை கூடுதலாக சேர்க்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow