நகை வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் ..... அதிரடியாக குறைந்த தங்கம் விலை !

இன்று காலை அதிகரித்த தங்கம் விலை தற்போது மாலையில் விலை குறைந்துள்ளது.

Aug 11, 2026 - 18:36
Aug 11, 2026 - 18:36
நகை வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் ..... அதிரடியாக குறைந்த தங்கம் விலை !
Gold Price

தங்கம் விலை கடந்த 5ஆம் தேதியிலிருந்து ஏறுமுகத்தைச் சந்தித்து வந்த நிலையில், அன்றைய தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்திருந்தது. நேற்று (09.08.2026) மட்டும சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து  இன்று காலையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக  உயர்ந்த நிலையில் அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,000 க்கும், கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை உயர்ந்த தங்கம் விலை தற்போது மாலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இது நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, காலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த நிலையில், தற்போது மாலை சவரனுக்கு ரூ.800 குறைந்து சவரனுக்கு ரூ.1,13,200 க்கும், கிராமுக்கு ரூ.14,150 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், காலை இருந்த விலையிலேயே கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,60,000 க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow