உலக நாடுகள் மீதான அமெரிக்கா வரி ரத்து: எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம் 

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த கடுமையான இறக்குமதி வரிகளை சட்டவிரோதம் எனக் கூறி, அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதற்கு எதிர்வினையாற்றியுள்ள அதிபர் ட்ரம்ப், நீதிபதிகளை கடுமையாக சாடியுள்ளார். அவர்கள் நாட்டுக்கே அவமானம் என்றும் அவர்களை விளாசியுள்ளார்.

உலக நாடுகள் மீதான அமெரிக்கா வரி ரத்து: எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம் 
எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம் 

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்த தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நமது நாட்டிற்கு சரியானதைச் செய்ய தைரியம் இல்லாததற்காக நீதிமன்றத்தின் சில உறுப்பினர்கள் குறித்து தான் வெட்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் RINO-க்களுக்கும் தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினருக்கும் முட்டாள்களாகவும், மடி நாய்களாகவும் இருக்கிறார்கள்,"என தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow