Ilaiyaraaja: ஒந்துணைக்கு நாந்தான் எந்துணைக்கு நீதான்… இளையராஜாவை குழந்தையாக மாற்றிய யுவன்!
இசைஞானி இளையராஜாவை அவரது மகன் யுவன் குழந்தையாக மாற்றி அன்பைப் பொழிந்த போட்டோ வைரலாகி வருகிறது.
சென்னை: தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கோரிய இளையராஜாவால் கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது. ஆனால் அவரோ ஹாயாக மொரீஷியஸ் தீவுக்கு டூர் சென்றுள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் மொரீஷியஸில் தனியாக காற்று வாங்கிய புகைப்படத்தை தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார் இளையராஜா. அதனைத் தொடர்ந்து நேற்றும் ஒரு போட்டோவை தனது டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை நெகிழ வைத்திருந்தார். அதில், தனது மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு இளையராஜா உணவு ஊட்டி விடுகிறார்.
இந்த போட்டோ வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாகி வந்தது. மேலும் ரசிகர்களும் விதவிதமான கேப்ஷன்களுடன் இளையராஜாவின் போட்டோவை ஷேர் செய்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் தனது மகள் பவதாரிணி உயிரிழந்த சோகத்தில் வாடிப்போனார் இளையராஜா. மேலும் பவதாரிணி இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் ‘அன்பு மகளே’ என அவரது சின்ன வயது போட்டோவை டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார். இளையராஜாவின் மீது விமர்சனம் இருந்த ரசிகர்கள் கூட அவரது துயரமான சூழலை கண்டு கண் கலங்கினர்.
அதன்பின்னர் மீண்டும் தான் ஏற்கனவே கமிட்டான படங்களுக்கு இசையமைக்கும் வேலைகளில் பிஸியாகிவிட்டார் இளையராஜா. அதேநேரம் அவர் தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு வழக்குத் தொடர்ந்தது சர்ச்சையானது. இந்த பஞ்சாயத்துக்கு இன்னும் முடிவு கிடைக்காத நிலையில், மொரிஷீயஸ் சென்றிருந்தார் இளையராஜா. கூடவே யுவனு செல்ல, அவரை தன் அருகில் அமர வைத்து உணவு ஊட்டி விட்டு, அந்தப் புகைப்படத்தை டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார்.
இந்த போட்டோவுக்கு வைப் கொடுக்கும் விதமாக, இளையராஜாவுக்கு உணவு ஊட்டி விட்டுள்ளார் யுவன். இந்த போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள யுவன், கேப்ஷனாக ஆர்டின் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். அடுத்தடுத்து அப்பாவும் மகனும் அன்பை பொழிந்து ரசிகர்களை நெகிழச் செய்துள்ளனர். மேலும், இசையின் இசை இசைக்கு உணவளிக்கிறது எனவும் கமெண்ட்ஸ் போட்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
What's Your Reaction?