சாந்தியை சட்டை செய்யாத தாரமங்கலம் ஜெய்சங்கர்.. சின்ன பொண்ணோடு சேட்டை.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

கணவனின் முறை தவறிய உறவு ஒரு பெண்ணின் உயிரை காவு வாங்கியுள்ளது. ஊர் ஊராக தலைமறைவாக சுற்றித்திரிந்த கணவனையும், அவரது கள்ளக்காதலியையும் தட்டி தூக்கியுள்ளது சேலம் போலீஸ்.

May 4, 2024 - 12:48
சாந்தியை சட்டை செய்யாத தாரமங்கலம் ஜெய்சங்கர்.. சின்ன பொண்ணோடு சேட்டை.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே, துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கும், சாந்தி என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெய்சங்கர் வெளியூரில் வேலை செய்து  வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில், போலீசார் நடத்திய விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வெளியான தகவல்கள் அதிர்ச்சி ரகமாக இருந்தது. கர்நாடகாவில் கல் உடைக்கும் தொழிலை செய்து வரும் ஜெய்சங்கருக்கு, பெரிய சோரகை பகுதியை சேர்ந்த சின்னப் பொண்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் முறைதவறிய உறவாக மாறியது. 

இதையறிந்த சாந்தி தனது கணவர் ஜெய்சங்கரை கடுமையாக கண்டித்திருக்கிறார். ஆனால், இதை காதிலேயே போட்டுக்கொள்ளாத ஜெய்சங்கர், தனது சேட்டையை  தொடர்ந்துள்ளார்.

கணவரைப் பிரிந்து, தனது பிள்ளைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று வாழ்ந்து வந்தார் சாந்தி. இந்த நிலையில், பெற்றோர் வீட்டில் நிம்மதியாக வாழ்ந்து வந்த சாந்தியை, மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில், கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சாந்தியின் செல்போனிற்கு அனுப்பியிருக்கிறார் ஜெய்சங்கர். 

இவளைப் போல உன்னால் சந்தோஷம் தர முடியுமா என்றும் கேட்டிருக்கிறார் ஜெய்சங்கர். இதனால், மனமுடைந்த சாந்தி, விரக்தியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதையடுத்து, சாந்தியின் தற்கொலைக்கு காரணமான கணவன் ஜெய்சங்கர், கள்ளக்காதலியுடன் தலைமறைவானார். கணவர் ஜெய்சங்கரை காவல்துறையினர் தேடி வந்தனர். 

ஜெய்சங்கரும் அவரது கள்ளக்காதலி சின்னப்பொண்ணுவும் ஓமலூர் அருகே தலைமறைவாக இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சின்னப்பொண்ணுவையும் ஜெய்சங்கரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் இன்னொரு ட்விஸ்ட் சின்னப்பொண்ணுவிற்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. தனது குடும்பத்தை மறந்து ஜெய்சங்கருடன் சுற்றியுள்ளார் சின்னப்பொண்ணு. ஜெய்சங்கருக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இதில் சாந்தியின் வாழ்க்கைதான் சோகமயமானது. வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மறந்து, பிள்ளைகளுடன் மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக வாழ நினைத்த பெண்ணிடம், ஈவு இரக்கமின்றி நடந்து கொண்ட கொடூர கணவனின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow