நான் சாதி வெறியன்தான்.. கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திருடர்கள்… வெளுத்து வாங்கிய நடிகர் ரஞ்சித்

நாடகக்காதல் நடத்தி வைக்கவே சில கும்பல் அலுவலகம் அமைத்து வேலை செய்கிறார்கள். நான் நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள் என்று நடிகர் ரஞ்சித் பேசியுள்ளார்.

Jun 22, 2024 - 15:40
நான் சாதி வெறியன்தான்.. கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திருடர்கள்… வெளுத்து வாங்கிய நடிகர் ரஞ்சித்

கோவை: நாடகக்காதல் நடத்தி வைக்கவே சில கும்பல் அலுவலகம் அமைத்து வேலை செய்கிறார்கள். நான் நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள் என்று நடிகர் ரஞ்சித் பேசியுள்ளார்.

நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் அடுத்தவாரம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் கோவை கோனியம்மன் கோவிலில் கவுண்டம்பாளையம் திரைப்பட குழுவினர் வழிபாடு நடத்தினர். வழிபாட்டிற்கு பின்னர் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 
கவுண்டம்பாளையம் திரைப்படம் ஜூலை 5ல் வெளியாகிறது. நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக எடுக்கப்பட்டுள்ளது. கோவை பகுதியை சுற்றி இந்த படத்தை எடுத்துள்ளோம்.

பணக்கார பிள்ளைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும் நாடக காதல் தான். இதனால், வரதட்சணை கொடுமை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெறுகின்றது. சுயமரியாதை திருமணம் என சொல்லி எவ்வளவு கொடுமை நெல்லையில் நடந்துள்ளது. சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்ணிற்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு, மற்ற பெண்களுக்கு பண்ண சொல்லுங்கள். ஆனால் பண்ண மாட்டார்கள். பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்க கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும். 

பெற்றவர்கள் தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களை பிரித்து கல்யாணம் நடத்தி வைப்பதற்கு, சேர்த்து வைத்து அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாமே?.
இதற்காகவே சில கும்பல் அலுவலகம் அமைத்து வேலை செய்கிறார்கள். நான் நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். ஆம் நான் ஜாதி வெறியன் தான். 

நான் நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அவர்கள் நாடக காதலை ஆதரிப்பவர்கள். கவுண்டம்பாளையம் படம் 200 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. ஏ சான்றிதழ் பெற்றிருந்தாலும், ஆபாச காட்சிகள் இல்லை. ஆனால் நாடக காதல் குறித்தப் படம் என்பதால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

கள்ளுகடையை திறக்க வேண்டும்.. கள்ளுகடையில் வருமானம் இல்லாத காரணத்தினால் இவர்கள் அதனை விரும்புவதில்லை. கள்ளச்சாராயம் விற்பவர்கள் சேர் பிடித்து சட்டசபையில் அமர்ந்துள்ளனர்.சாலை திரும்பும் இடங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. மது ஸ்லோ பாய்சன். கள்ளச்சாராயத்தை இவர்களால் ஒழிக்க முடியாது. இந்த திருடர்கள் நமக்கு வேண்டாம்.மதுவை வைத்து தான் தமிழகத்திற்கு வருமானம். இதுதான் தொழில் வளர்ச்சியா?.கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா? நாளை தலைமுறை  காப்பாற்ற அரசியல் மாற்றம் வேண்டும். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்த காரணத்தினால் கள்ளக்குறிச்சியில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர்.விவசாயி தற்கொலை செய்து கொண்டால் ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார் ரஞ்சித்

கவுண்டம்பாளையம் படத்திற்கு நிறைய எதிர்ப்பு உள்ளது. அரசியல் மிகப்பெரிய வியாபாரம். எனவே அதில் அரசியல் கடைகள் உள்ளது. புதிய கடைகளும் திறக்கப்படவுள்ளது. நல்ல அரசியல் கட்சி வர வேண்டும் அந்த ஆசை எனக்கும் உள்ளது.அரசியல் கட்சி ஆரம்பிக்க திட்டமில்லை,சேரவும் திட்டமில்லை என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow