Kavin: முதலில் சிவகார்த்திகேயன்... இப்போ சூர்யா... வாய்ப்புகளை தட்டித் தூக்கும் கவின்!

சில்லுன்னு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்குப் பதிலாக கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 1, 2024 - 16:02
Kavin: முதலில் சிவகார்த்திகேயன்... இப்போ சூர்யா... வாய்ப்புகளை தட்டித் தூக்கும் கவின்!

சென்னை: டாடா, ஸ்டார் படங்களின் வெற்றிக்குப் பின்னர் கவினின் மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது. கடந்தாண்டு ரிலீஸான டாடா, கவின் கேரியரில் சிறப்பான ஓபனிங் கொடுத்தது. அதனால், அடுத்தடுத்து சில படங்களில் கமிட்டான கவின் தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். இதனிடையே கடந்த மாதம் ரிலீஸான ஸ்டார் திரைப்படம் எதிர்பார்த்தளவிற்கு வெற்றிப் பெறவில்லை. அதேநேரம் கவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதன் காரணமாக கவினுக்கு மேலும் பல பட வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன.

சில்லுன்னு ஒரு காதல் இரண்டாம் பாகம்
இந்நிலையில், சில்லுன்னு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவின் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் 2006ம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் சில்லுன்னு ஒரு காதல். கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். காதல் ப்ளஸ் ரொமான்ஸ் ஜானரில் உருவான சில்லுன்னு ஒரு காதல், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏஆர் ரஹ்மானின் இசையில் பாடல்களும் செம்ம ஹிட்டடித்தன. அதேபோல், வடிவேலு காமெடியும் படத்துக்கு பலம் சேர்த்தது. முக்கியமாக சூர்யா – ஜோதிகா கெமிஸ்ட்ரி சில்லுன்னு ஒரு காதல் படத்தை இன்றளவும் தனித்து ரசிக்க வைக்கிறது.

சூர்யாவுக்குப் பதிலாக கவின்
சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதில் சூர்யாவுக்குப் பதிலாக கவின் ஹீரோவாக நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சில்லுன்னு ஒரு காதல் இரண்டாம் பாகத்தையும் கிருஷ்ணாவே இயக்கவுள்ளாராம். முன்னதாக சிம்பு நடித்த பத்து தல படத்தை இயக்கிய கிருஷ்ணா, அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால், அவரோ சில்லுன்னு ஒரு காதல் பார்ட் 2 இயக்க ரெடியாகிவிட்டாராம். 

சில்லுன்னு ஒரு காதல் 2 அப்டேட்
சில்லுன்னு ஒரு காதல் 2ம் பாகம் குறித்து விரைவில் அபிஸியலாக அப்டேட் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் இந்த இரண்டாம் பாகத்தில் கவின் ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அதேபோல் சில்லுன்னு ஒரு காதல் இரண்டாம் பாகத்தில், இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் கமிட் ஆவாரா என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்தப் படத்தின் 2ம் பாகத்திலும் கவின் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow