vj siddhu ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. வீடு தேடி வந்த வாய்ப்பு
vj siddhu vlogs சேனல் மூலம் யூடியூப் வலைத்தளத்தில் கலக்கி வரும் vj சித்து இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் யூடியூப் வலைத்தளத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் VJ சித்து. இவரும், இவரது குழுவினரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் கொஞ்சம் நஞ்சமில்லை. கலகலப்பாக இருக்கும் இவரது வீடியோக்கள் பதிவிட்ட சில மணிநேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை தாண்டுகிறது.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்பெற்ற டிராகன் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார் VJ சித்து. தற்போது இவர் இயக்குநர் அவதாரம் எடுக்கப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஐசரி கே கணேஷ் அவரது தயாரிப்பு நிறுவனமான, Vels Film International Limited சார்பில் VJ சித்துவை கதாநாயகனாக வைத்து திரைப்படம் ஒன்றை தயாரிக்க பேச்சுவார்த்தை எழுந்துள்ளது. முதலில் VJ சித்துவுக்காக மற்ற இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த தயாரிப்புக் குழுவுக்கு எதிலும் திருப்தி வரவில்லை. இறுதியில் VJ சித்துவை ஒரு ஒன்லைன் சொல்ல, தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷுக்கு உடனடியாக பிடித்துவிட்டதாம். நீங்களே படத்தை இயக்கி நடிங்க என நம்பிக்கை கொடுத்துள்ளார் தயாரிப்பாளர். இதற்கான ப்ரோமோ ஷூட் சமீபத்தில் நடைப்பெற்றதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அறிமுக இயக்குநர்களை ஊக்குவிக்கும் வேல்ஸ்:
Vels Film International தொடர்ந்து புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 25-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள நிலையில், கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸீல் ஹிட் அடித்துள்ளன.
தயாரிப்பு நிறுவனத்திடமிருந்தோ? VJ சித்து சார்பிலோ இதுவரை இதுக்குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. VJ சித்து இயக்கம் உறுதியாகும் பட்சத்தில் அவரது ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் எனலாம்.
Read more: தனுஷூக்கு டைரக்ட் பண்ண சொல்லிக் கொடுத்தீங்களா? கஸ்தூரி ராஜா ஒபன் டாக்
What's Your Reaction?






