ஆஸ்கருக்கு சென்ற இந்திய படம் எது தெரியுமா? நேரடியாக களமிறங்கும் 6 தமிழ்ப்படங்கள்?
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் லாபத்தா லேடீஸ் திரைப்படம் தேர்வாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் விருது அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்கள், சமுகத்தில் மாற்றத்தையும் தாக்கத்தையும், வெளிப்படுத்தும் படங்கள், என பல திரைப்படங்கள் இந்த ஆஸ்கர் போட்டியில் இடம்பெறும்.
இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க, இந்தியாவில் இருந்து மொத்தம் 29 படங்கள் போட்டியிட்டன. மொத்தம் இந்தி - 11, தமிழ் - 6, மலையாளம் - 5, மராத்தி - 3, தெலுங்கு - 3, ஒரியா - 1. அதில் கடைசி 5 திரைப்படமாக, லாபத்தாலேடிஸ், தங்கலான், வாழை உள்ஒழுக்கு, ஶ்ரீகாந்த் ஆகிய 5 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டது. தமிழில் மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா XX, வாழை, தங்கலான், ஜமா உள்ளிட்ட திரைப்படங்கள் இதில் இடம் பெற்றிருந்தது.அதில் இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் லாபத்தா லேடீஸ் என்ற இந்தி மொழி திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார்களின் ஒருவரான அமீர்கானின் மனைவி கிரண் ராவ் தயாரித்து இயக்கிய ’லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்து. இப்படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரும் அளவில் வரவேற்பை பெற்றது. பாலின சமத்துவம், கல்வி உரிமை போன்றவற்றை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் வெளியான போதே, இது நிச்சயம் ஆஸ்கர் செல்லும் என்று சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, படத்தை பார்த்த ஒவ்வொருவரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதனடிப்படையில் தற்போது இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது ’லாபத்தா லேடீஸ்’.
வெளிநாட்டு மொழி பிரிவில் இந்தியாவில் இருந்து லாபதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், தங்கலான், வாழை, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா, ஜமா, மகாராஜா படங்கள் நேரிடையாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?