தவெக மாநாடு: இத கவனிச்சிங்களா? புஸ்ஸி ஆனந்த் சொன்ன 8 முக்கியமான விஷயங்கள்!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய், விரைவில் முழுநேர அரசியல் களத்தில் குதிக்க உள்ளார். இதனால் தான் கமிட்டாகி இருந்த அனைத்து படங்களின் பணிகளையும் இந்தாண்டே முடித்துவிட்டு அரசியல் பணிகளில் தீவிரமாக இறங்க உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், வரும் அக்டோபர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை நடத்த உள்ளார். தவெக மாநாடு வரும் செப்டம்பர் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், போலீஸார் தரப்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில், மாநாட்டு தேதி தள்ளிபோகியுள்ளது. அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு, வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்படி,
1. தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வரும் கட்சித் தோழர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது.
2. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
3. சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
4. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் ஈடுபடவே கூடாது.
5. அதிகாரிகளிடம் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
6. கிணறு மற்றும் ஆபத்தான பகுதிகள் இருந்தால் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
7. மருத்துவக் குழு மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.
8. பேருந்து மற்றும் வேன்களில் தகுந்த எண்ணிக்கையில் மட்டும் தொண்டர்களை அழைத்து வரவேண்டும்.
இவ்வாறாக தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.
What's Your Reaction?