இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் - பிரதமர் மோடிக்கு சுந்தர் பிச்சை பாராட்டு
சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிலும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும்

இந்த நிலையில், நியூயார்க்கில் உலகின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் இந்தியாவில் முதலீடு, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், மக்கள் பலனடையும் வகையில் ஏ.ஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இதில் கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை, ஐ.பி.எம்., நிறுவன சி.இ.ஓ அரவிந்த் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பேசிய சுந்தர் பிச்சை, தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் பார்வையும், கூகுள் நிறுவனத்தின் முயற்சிகளும் ஒரே மாதிரிதான் உள்ளது. இந்தியாவில் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், கூகுள் பிக்ஸல் போன் இந்தியாவில் தயாரிக்கப்படுவதைப் பெருமையாக உணர்கிறோம். ஏ.ஐ தொழில்நுட்பம் இந்திய மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு குறித்து பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. மேலும் சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும் என்றார்
What's Your Reaction?






