Kanguva: “கங்குவா ரிலீஸ் தேதி எப்போ... எங்க அண்ணன விட்ருங்க” சூர்யா ரசிகர்கள் அட்ராசிட்டி!
கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி கேட்டு சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது. ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. சூர்யாவின் கேரியரிலேயே கங்குவா மாதிரி இன்னொரு மூவி வர வாய்ப்பே இல்லை என தாறுமாறாக ப்ரோமோஷன் செய்தது படக்குழு. அதுமட்டும் இல்லாமல் கங்குவா படத்தை 32க்கும் அதிகமான மொழிகளில் வெளியிட உள்ளதாகவும் ஸ்டூடியோ க்ரீன் தரப்பில் அப்டேட் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை மட்டும் அறிவிக்கவே இல்லை.
இதனால் வெறுத்துப் போன சூர்யா ரசிகர்கள், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு அன்புக் கட்டளைப் போட்டு அட்ராசிட்டி செய்துள்ளனர். அதாவது கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி எப்போது அறிவிப்பீர்கள் எனக் கேட்டு, திண்டுக்கல் பகுதி சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”கங்குவா ரிலீஸ் தேதி எப்போ வரும்?, We want kanguva update, படத்தை எடுத்து சொன்ன தேதில வெளியிட திராணியும் தைரியமும் இருந்தால் மட்டும் படத்தை தயாரிங்க. நீங்க உங்க தயாரிப்பு நிறுவனத்தை வைச்சு என்னா வேணா பண்ணுங்க... எங்க அண்ணன விட்ருங்க... – அண்ணன் சூர்யாவின் போர்படை வீரர்கள்” என மிரட்டலாக அப்டேட் கேட்டுள்ளனர்.
இந்த போஸ்டர் டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களும் கங்குவா படக்குழுவினரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். சூர்யாவின் கங்குவா ஹாலிவுட்டுக்கே சவால் விடும் என சொன்ன ஸ்டூடியோ க்ரீன், இப்போது ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருப்பது ஏன் எனக் கேட்டு வருகின்றனர். கமலின் இந்தியன் 2, தனுஷின் ராயன், ரஜினியின் வேட்டையன், விஜய் நடித்து வரும் தி கோட் படங்களின் ரிலீஸ் தேதிகளை அந்தந்த படக்குழு அறிவித்துவிட்டது. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதமும், அஜித்தின் விடாமுயற்சி தீபாவளி தினத்தன்றும் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால், சூர்யாவின் கங்குவா, விக்ரம் நடித்துள்ள தங்கலான் படங்களின் ரிலீஸ் தேதி குறித்து சின்ன அப்டேட் கூட வெளியாகவில்லை. இந்த இரண்டு படங்களையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கங்குவா, தங்கலான் என இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதோடு, போஸ்ட் புரோடக்ஷன் வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. பருத்தி வீரன் விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு எதிராக பேட்டிக் கொடுத்து வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார் ஞானவேல் ராஜா. அப்போது தனது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பற்றி ஹைப் கொடுத்து பேசிய ஞானவேல் ராஜா, இப்போது கங்குவாவை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கிறாரே எனவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?