விண்ணில் ஏவப்படும் இந்தியாவின் 2ம் தனியார் ராக்கெட்.. தேசத்தை கலக்கப் போகும் தமிழக இளைஞர்கள் !!
அக்னிகுல் என்ற சொந்த ஸ்டார்ட் அப் மூலம் இந்தியாவின் முதல் செமி கிரையோஜெனிக் என்ஜினுடன் கூடிய, நாட்டின் 2வது தனியார் ராக்கெட்டை, வருகின்ற மார்ச் 22ம் தேதி தமிழ்நாட்டு இளைஞர்கள் இருவர் விண்ணில் ஏவவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் விண்வெளித்துறை அரசு வசமே செயல்பட்டு வரும் நிலையில், எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ், அமேசாக் ஜெஃப் பெசோசின் ஃப்ளூ ஆர்ஜின் போன்ற சில பெரிய அளவிலான தனியார் நிறுவனங்கள் மட்டுமே அத்துறையை கையில் எடுத்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனமாக, சென்னை தரமணியில் உள்ள IIT மெட்ராஸ் ஆய்வுப்பூங்காவில் அக்னிகுல் காஸ்மோஸ் உருவானது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீநாத் ரவிச்சந்திரனும், தலைமை செயல்பாட்டு அதிகாரியான மொய்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னைவாசிகள்.
தங்களது ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்காக ரூ.400 கோடி நிதியை திரட்டிய நிலையில், இந்தியாவில் முதன்முறையாக 3டி பிரிண்டிங்க மூலம் ராக்கெட் என்ஜினை இருவரும் உருவாக்கியுள்ளனர். இஸ்ரோவானது ஸ்ரீஹரிகோட்டாவில் ஒரு தனி ஏவுதளத்தை அக்னிகுல் காஸ்மோஸ்-க்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு நவம்பரில் இஸ்ரோவில் என்ஜின் சோதனை நடைபெற்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் ராக்கெட்டை பார்வையிட்டு பாராட்டினார். இந்நிலையில் வரும் 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் மூலம் இந்தியாவின் 2வது தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்குச் சொந்தமான அக்னிகுல் காஸ்மோஸ் விண்ணில் ஏவப்படுகிறது. அக்னிபான் சார்டெட் (Agnibaan SOrTeD) என்ற செமி கிரையோஜெனிக் என்ஜினுடன் தேசத்தின் முதல் ராக்கெட்டாக இது அமையும் என கூறப்பட்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 700 கி.மீ உயரத்தில் 100 கி.கி எடைகொண்ட செயற்கைக்கோளைக் கொண்டு நிலைநிறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?