கோழி எல்லாம் எங்க கொண்டு போறீங்க..? 140 கி.மீ பாதயாத்திரையின் போது அனந்த் அம்பானி செய்த செயல்!

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, தனது பாதயாத்திரையின் போது சாலையில் இறைச்சிக்காக கோழிகளை ஏற்றிச் சென்ற வேனை நிறுத்தி கோழிகளை மீட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Apr 2, 2025 - 13:23
Apr 2, 2025 - 13:25
கோழி எல்லாம் எங்க கொண்டு போறீங்க..? 140 கி.மீ பாதயாத்திரையின் போது அனந்த் அம்பானி செய்த செயல்!
anant ambani

கடந்த ஒரிரு வருடமாகவே சமூகவலைத்தளங்களில் கவனத்தை பெற்று வருகிறார் ரிலையன்ஸ் குழுமத்தின் அனந்த அம்பானி. இவருக்கு கடந்தாண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைப்பெற்றது. ஒட்டுமொத்த திரையுலக நட்சத்திரங்கள், உலகின் பெரும் செல்வந்தர்கள், முன்னணி விளையாட்டு வீரர்கள், பிரதமர் உட்பட பெரும் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற அனந்த் அம்பானியின் திருமணம் உலகளவில் பேசுப்பொருளாக விளங்கியது.

அதனைத் தொடர்ந்து விலங்குகளின் நலன் மீது ஆர்வம் கொண்ட அனந்த் அம்பானி ஜாம்நகர் பகுதியில் வந்தாரா என்கிற விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தினை தொடங்கினார். இதற்கு வாழ்த்துகள் ஒருபுறம் வந்தாலும், சில சர்ச்சைகளும் எழுந்தன.

பிறந்தநாளை முன்னிட்டு பாதயாத்திரை:

இந்நிலையில் தான் வரப்போகிற தனது 30-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜாம்நகரிலுள்ள தனது இல்லத்திலிருந்து கிட்டத்தட்ட 140 கி.மீ கொண்ட தூரத்தில் அமைந்துள்ள துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோயிலுக்கு பாதயாத்திரை பயணத்தை தொடங்கியுள்ளார் அனந்த் அம்பானி. வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி, பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் தினசரி இரவு நேரங்களில் 10 முதல் 12 கி.மீ தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அனந்த் அம்பானி. 

Z+ பாதுகாப்புடன் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அனந்த் அம்பானி, தீடீரென்று ஒரு வாகனத்தை நிறுத்தினார். அந்த வேனில் கூண்டில் அடைக்கப்பட்ட கோழிகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து கோழிகளையும் தானே வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் விலங்குகள் நலன் மீது ஆர்வம் கொண்ட அனந்த் அம்பானி, இறைச்சிக்காக வேனில் கொண்டு செல்லப்பட்ட கோழிகளை மீட்டுள்ள சம்பவம் தொடர்பான காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Read more: World Wildlife Day: நிதி இல்லாமல் வனவிலங்கு பாதுகாப்பு எப்படி சாத்தியம்?

பதாயத்திரை குறித்து பேசிய அனந்த் அம்பானி, “கடந்த 5 நாட்களாக பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகிறேன். இன்னும் இரண்டு அல்லது 4 நாட்களில் நாங்கள் துவாரகாவை அடைவோம். துவாரகாதீஷர் நம்மை ஆசிர்வதிப்பாராக” என குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow