காரில் கட்டுக்கட்டாக பணம்... அள்ளிப் போட்டு வந்த பறக்கும் படையினர்....

உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.48.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

Mar 20, 2024 - 09:30
காரில் கட்டுக்கட்டாக பணம்... அள்ளிப் போட்டு வந்த பறக்கும் படையினர்....

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.48.75 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் அருகே தேர்தல்  நிலை கண்காணிப்புக் குழு திருமால் செல்வம், உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம்  வெள்ளுட்டுக்கள் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஆர்.கே.வில்லியம்ஸ் என்பவர் இயக்கி வந்த சொகுசு காரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதேபோல், கோவில் வழி அருகே ஈஸ்வரன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.75,200 ரொக்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.48,75,200 ரொக்கத்தை மாநகராட்சி ஆணையரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் ஜி. கிரியப்பனவரிடம் ஒப்படைக்கப்பட்டு  கருவூலத்துக்கு அனுப்பப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow